ஆண்களிடம் பெண்கள் மறைக்கும் ரகசியங்கள்
என்ன தான் ஆண்கள் அவர்களது காதலிகள் மீது அன்பும், பரிசும் கொட்டி தீர்த்தாலும், ஒரு சில ரகசியங்களை பெண்கள் கசியவிடுவதில்லை.
பெண்களை நாம் என்னதான் ஓட்டை வாய் என்று கூறினாலும், அவர்கள் சில விஷயங்களை அவர்களது காதலர்களிடம் மட்டும் கூறுவதில்லை. இதில் பெரும்பாலான பெண்கள் அவர்களது குடும்பம் பற்றிய ரகசியங்களைத் தான் தங்களிடம் மறைப்பதாக ஆண்கள் நினைப்பது தவறு. பெண்கள் அவர்களது காதலர்களிடம் இருந்து மறைக்கும் 90% ரகசியங்கள் அவர்களைப் பற்றிய சுய விஷயங்கள் தான்.
பெண்கள் தங்களது ரகசியங்களை மறைக்கும் சூழ்நிலைகளில் தடுமாறுவார்கள், பதட்டம் அடைவார்கள், சிலர் நன்கு உளறுவார்கள். நீங்கள் இருவரும் நன்கு பேசிக்கொண்டிருக்கும் போது, உங்கள் கேள்வியோ அல்லது அந்த சூழ்நிலையோ அவர்களது ரகசியங்களைப் பற்றியதாய் இருந்தால் பெண்கள் பேச்சை மாற்ற முற்படுவர் அல்லது மனது சரியில்லை என கிளம்பிவிடுவார்கள். சரி, அப்படி அவர்கள் காதலர்களிடம் மறைக்கும் ரகசியங்கள் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்...
முன்னாள் காதல்
பெரும்பாலான பெண்களுக்கு இந்நாட்களில், முன்னாள் காதல் என்பது மிக இயல்பான ஒன்றாய் இருக்கிறது. தற்சமயம் பெண்கள் தங்களது தற்சமய காதலனிடம் மறைக்கும் முக்கியமான விஷயம், அவர்களது முன்னாள் காதலனை பற்றிதான்.
குடும்ப நிலை
இப்போதல்லாம் வெளியில் மிக ஆடம்பரமாக தெரிபவர்கள் நிஜமாகவே செல்வந்தர்களாக இருக்க மாட்டார்கள். காதலுக்கு பணம் தேவை இல்லை தான். ஆனால், ஆண்களிடம் தாங்கள் ஆடம்பரமானவர்கள் என காட்டிக்கொள்ள பெண்கள் விரும்புவார்கள். எனவே தங்களது குடும்பத்தின் உண்மை நிலையையும், இரகசியத்தையும் பெண்கள் பெரும்பாலும் மறைகின்றனர்.
ஆண் தோழர்கள்
ஆண்கள் எப்படி தனது பெண் தோழிகளைப் பற்றிய ரகசியங்களை மறைகின்றனரோ, அதேப்போல பெண்களும் தங்களது ஆண் தோழர்களைப் பற்றிய விபரங்களை காதலர்களிடம் எக்கச்சக்கமாய் மறைகின்றனர். இது காதலில் இருவர் மேலும் உஷார் நிலையில் இருக்க வைக்கிறது.
குழந்தைத்தனமான செயல்கள்
பெண்கள் என்னதான் வளர்ந்தாலும், உடலளவில் முதிர்ச்சியடைந்தாலும், அவர்களது மனதளவில் குழந்தைத்தனம் மாறாமல் இருப்பார்கள். பொம்மைகளை கட்டிப்பிடித்து தூங்குவதில் ஆரம்பித்து, லூசுத்தனமான செயல்கள் பலவற்றை கழுதை வயதை அடைந்தாலும் பின்பற்றுவர். இதை பெரும்பாலான பெண்கள் தங்களது காதலர்களிடம் மறைத்துவிடுகின்றனர்.
பெண் தோழிகளைப் பற்றி
தன்னை விட அழகான பெண் தோழிகள் அவர்களுக்கு இருந்தால், அவர்களைப் பற்றி முழுவதுமாய் மறைத்துவிடுவது பெண்களின் குணாதிசயம். இதை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மாற்றிட இயலாது.
அந்த மாதிரியான பேச்சுக்கள்
ஆண்கள் எப்படி தங்களது நண்பர்களுடன் 'அந்த' விஷயங்கள் பற்றி பேசுகின்றனரோ, அதேப்போல அதுக்கும் மேல் தாறுமாறாக பேசுவார்கள் பெண்கள். ஆனால், அதை எல்லாம் மூடி மறைத்து தங்களுக்கு அந்தரங்கம் பற்றி துளி அளவு கூட தெரியாததைப் போல முகத்தை வைத்துக் கொள்வர்.
உடல் சார்ந்து
பெண்கள் தங்களது உடல் சார்ந்த விஷயங்களை காதலர்களிடம் சொல்வதில்லை, அது பிரச்சனைகளாக இருந்தாலும் சரி அல்லது ஆண்கள் தவறாக நினைத்துவிடுவார்கள் என்ற அந்தரங்க விஷயங்களை பற்றியதாக இருந்தாலும் சரி, அவர்கள் காதலர்களிடம் தங்களது உடல் சார்ந்த விஷயங்களை ரகசியமாய் வைத்துக் கொள்கின்றனர்.
கெட்ட பழக்கங்கள்
கெட்ட பழக்கம் என்றால் நகம் கடிப்பது, விரல் சூப்புவது போல அல்ல, பொறாமைப்படுவது, கிசுகிசு பேசுவது, அவர்களது கஞ்சத்தனத்தை மூடி மறைத்து, தங்களை குபேரனுக்கு சொந்தக்காரி போல காட்டிக்கொள்வது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக